எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்று தொடர் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 27ம் தேதி
மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை சேர்ந்த சரவணன், பாண்டியன் உள்ளிட்ட 4
மீனவர்கள் பைப்பர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என விரட்டி அடித்ததுடன் நாகை மீனவர்கள் விரித்து இருந்த வலைகளை அறுத்து எடுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்துள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை இலங்கை மீனவர்கள் எடுத்துச்
சென்றதால் நாகை மீனவர்கள் அந்த வலைகளை தேடி யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிக்கு
சென்ற போது நாகை மீனவர்கள் சென்ற மீன்பிடி படகில் உள்ள எஞ்சினில் கோளாறு
ஏற்பட்டதால் மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை கடற்கரையில் தஞ்சம்
அடைந்துள்ளனர். வல்வெட்டிதுறையில் தஞ்சமடைந்த நாகை மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள் அவர்களுக்கு உணவு அளித்து வல்வெட்டி துறை போலீசாருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் தகவல் அளித்தனர்.
இலங்கை மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரடியாக சம்பவ இடத்திற்கு
சென்ற இலங்கை கடற்படையினர் மற்றும் வல்வெட்டித்துறை போலீசார் மீனவர்களிடம்
முதல் கட்ட விசாரணை நடத்தி அடுத்த கட்ட விசாரணைக்காக மீனவர்கள் நால்வரையும்
வல்வெட்டித்துறை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் வல்வெட்டிதுறையில் தஞ்சமடைந்த மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டுமென யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வல்வெட்டித்துறை போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக இலங்கை அரசு நான்கு நாகை மீனவர்களையும் கைது செய்வதாக அல்லது திருப்பி தமிழகத்திற்கு அனுப்புவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளில் இலங்கை
மீனவர்கள் அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் நாகை மாவட்டம் மீனவர்களிடையே
பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.