SRHvsDC | 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் அசத்தல் , டெல்லி அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் 164 ரன்களை ஹைதரபாத்  அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

18வது ஐபிஎல் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று(மார்ச்.30) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத்  அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஹைதரபாத்  அணியில், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, ஹென்ரிச் கிளாசென் (Wk) அபினவ் மனோகர் பேட் கம்மின்ஸ் (C), ஜீஷன் அன்சாரி ஹர்ஷல் படேல் முகமது ஷமி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

டெல்லி அணியில், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல்(Wk) , அக்சர் படேல்(C), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் விளைடுகின்றனர்.

LSGvsDC | நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷின் அதிரடி ஆட்டம் - டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு! - News7 Tamil

முதல் இன்னிங்ஸில் ஹைதரபாத்  அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் டிராவிஸ் ஹெட் 22 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர் முடிவுகளில் ஹைதரபாத்  அணி 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. டெல்லி பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.