தாம்பரம் – கொச்சுவேலி இடையே #SpecialTrain இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை தாம்பரம் – கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுவாக விழாக்காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம்…

சென்னை தாம்பரம் – கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொதுவாக விழாக்காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். மேலும் இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட காலம் வரை நீட்டிக்கவும் செய்யப்படுகிறது.

அந்த வகையில் ஓணம் பண்டியகையையொட்டி, தாம்பரம்- கொச்சுவேலி இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து வருகின்ற செப்.6, 8, 13, 15, 20, 22 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாரம் இரண்டு முறை சிறப்பு ரயில்கள் கொச்சுவேலிக்கு இயக்கப்பட உள்ளது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது, மறுநாள் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். அதேபோல், மறு மார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து 7, 9, 14, 16, 21, 23 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலானது திருச்சி, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.