நாளை துவங்குகிறது தென்மாநில துணைவேந்தர்கள் மாநாடு

தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது. அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சார்பில் தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளையும், நாளை…

தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது.

அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சார்பில் தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநாட்டில் தொடக்கவுரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாகவும், இதில் ஏற்படும் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.