சோனியா அகர்வாலின் ‘7ஜி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘7ஜி’ திரைப்படம் வரும் ஜூலை  5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்…

நடிகை சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘7ஜி’ திரைப்படம் வரும் ஜூலை  5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.  காதல் கொண்டேன்,  கோயில்,  7 ஜி ரெயின்போ காலனி,  புதுப்பேட்டை,  வானம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்,  நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் கொடுத்தது.  குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனியில் அவரின் நடிப்பு இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

இடையில் சினிமாத்துரையில் இருந்து விலகிய சோனியா தற்போது  சில படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.  தற்போது ஹருண் இயக்கத்தில் 7/ஜி டார்க் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.  டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடித்துள்ளார்.

 

மேலும்,  இதில் சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி  கவனம் பெற்றது.  இந்த நிலையில் ‘7ஜி’ திரைப்படம் வரும் ஜூலை  5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.