முக்கியச் செய்திகள் தமிழகம்

பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!

திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 47 வயதில் ரத்தினவேல் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே ஊரில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். தாயுக்கும் மகனுக்கும் இடையே பல வருடங்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அடிக்கடி தனது தாயுடன் ரத்தினவேல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தாய் முத்தமாளை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முத்தமாளை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். மதுபோதையில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி – வாலி

G SaravanaKumar

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

G SaravanaKumar

சர்ச்சைக்குரிய மும்பை நீதிபதியின் பதவிக்காலம் குறைப்பு!

Jayapriya

Leave a Reply