அமரன் டீசரின் மூலம், சிவகார்த்திகேயன் சென்னையை சேர்ந்த ராணுவ அதிகாரியான முகுந்த் வரதராஜனாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது.
இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.







