‘#Amaran’ படத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவுசெய்தார் சிவகார்த்திகேயன்!

வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘அமரன்’ படத்துக்கான டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் நிறைவுசெய்தார் . சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில்…

வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘அமரன்’ படத்துக்கான டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் நிறைவுசெய்தார் .

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும்,  தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, நடிகை சாய் பல்லவி அமரன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக, இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணியை முடித்துள்ளாதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.