சீர்காழி: மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் – விவசாயிகள் வேதனை

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

இதனால், அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகளும் காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து முழுமையான காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.