பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு – ஆந்திரா விரைந்தது #TamilnaduPolice!

சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது.…

Singer Mano sons absconding - Andhra rushes #TamilnaduPolice

சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 வயது சிறுவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மனோவின் 2 மகன்களும் தலைமறைவாகினர்

வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து இசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்த நிலையில் இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தற்போது ஆந்திரா மாநிலம் விரைந்துள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.