”சித்த மருத்துவ பல்கலைக்கழகம்” – அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதால், கூடிய விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திதார்.…

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதால், கூடிய விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது,  சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே 19.3 ஏக்கர் நிலம் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சித்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். எனவே கூடிய விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்றார்.

மேலும், ‘பதினான்கிற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு தமிழர்களுக்குத் தேவையில்லை என்ற நிலை தமிழக மக்களின் மத்தியில் எழுந்துள்ளது.
நேற்று நடந்த தேநீர் விருந்து புறக்கணிப்பு ஆளுநரின் மனதை தொடும். கட்டாயம் நீட் தேர்வு விலக்கு கோப்பை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்

– கோகுலப் பிரியா, மாணவ பத்திரிகையாளர்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.