மாய உலகிற்கு அழைத்துச் சென்ற ஷங்கர்… வெளியானது ‘நானா ஹைரானா’ பாடல்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘நானா ஹைரானா’ வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண். கடைசியாக…

Shankar, who took us to a magical world... The song 'Nana Hairana' has been released!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘நானா ஹைரானா’ வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண். கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, நாசர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் “ஜரகண்டி” மற்றும் “ரா மச்சா மச்சா” பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அரசியல் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அக்ஷன் த்ரில்லர் பாணியில் படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘நானா ஹைரானா’ தற்போது வெளியாகி உள்ளது. இப்படலை ஸ்ரேயா கோஷல் மற்றும் கார்த்தி இருவரும் பாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.