புதுக்கோட்டையில், ஆர்எஸ் பதி தைல மரக்காட்டில் ஏற்பட்ட திடீர் விபத்தில்,
பல ஏக்கர் பரப்பிலான யூகலிப்டஸ் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான
ஏக்கர் பரப்பளவில் தைல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், தைல மரங்கள்
வளர்ப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
கூறினர். ஆனால் , வனத்துறை தைல மரங்கள் வளர்ப்பதை நிறுத்திக்
கொள்ளவில்லை .
இந்நிலையில், புதுக்கோட்டை காமராஜபுரம் 35-ம் வீதி பகுதியில் , வனத்துறைக்கு
சொந்தமான ஆர்எஸ் பதிக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில்
யூகலிப்டஸ் மரங்கள் தீயில் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால், புகை மூட்டமாக
நகர் முழுவதும் காணப்பட்டது. பல மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
–கு.பாலமுருகன்







