தமிழ்ல சொல்லுங்க…ஒண்ணுமே புரியல… வெளியானது ‘ரகு தாத்தா’ டீசர்!

எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கிய ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த…

எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கிய ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி விமரிசனங்களைப் பெற்றது. ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில்  நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “தற்கால தலைவர்களை காமராஜரோடு ஒப்பிடுவது சரியல்ல” – அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்!

இப்படத்தில் எம். எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனத்தை பெற்று உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.