#Thalapathy69 -ல் இணைந்த சர்கார் பட நடிகை? வெளியான தகவல்!

விஜயின் ‘தளபதி 69’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட்…

விஜயின் ‘தளபதி 69’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர்.மேலும் இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சென்னையில் செட் அமைக்கப்பட்டு தளபதி69 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தளபதி 69 -ல் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. வரலட்சுமி ஏற்கனவே ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.