சர்தார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் கார்த்தியில் சர்தார் 2 படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படமான ‘சர்தார்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்தார்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சர்தார்-2 செப்டெம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், ஷா ரா, யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட நடிகர் பட்டாள்மே நடித்துள்ளன. பெரும் பொருட்செலவில் உறுவாகி வரும் இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.