உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறினார். தற்போதுள்ள இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சொந்த மைதானத்தில் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். இந்திய அணியை அடுத்து இங்கிலாந்து அணிக்கு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் சங்ககாரா தெரிவித்தார்.







