காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்து நாவலில் இடம்பெற்றுள்ளது. 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் காலா பாணி ஆகும்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். இவர் டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது காலா பாணி நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படமாக மாறவுள்ளது காலா பாணி நாவல்
சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.ராஜேந்திரன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காலா பாணி நாவலை வைத்து திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பிரபல முன்னணி இயக்குனர் இந்த நாவலை வாங்கியுள்ளதாகவும், அதற்கான திரைக்கதையை 60 பக்கங்கள் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் இந்த இரண்டு நாவல்களும் திரைப்படம் ஆகும் என மு.ராஜேந்திரன் உறுதியாக கூறினார்.