‘சலார்’ டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு!

‘சலார்’ டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.   இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப்.…

‘சலார்’ டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

https://twitter.com/hombalefilms/status/1723558756985004041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1723558756985004041%7Ctwgr%5E6aa66bed117aaa50c29538a7c132966c06b36fdd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Fsaalar-trailer-to-release-on-1st-december-crew-announcement-1082543

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி இரவு 7.19 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.