ராமர் பாடல்களை பாடி நடனமாடிய ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் ராமர் பாடல்களை பாடி நடனமாடி மகிழ்ந்தனர். உலக சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் . இங்கு நிலவும் இதமான…

கொடைக்கானலில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் ராமர் பாடல்களை பாடி நடனமாடி மகிழ்ந்தனர்.

உலக சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் . இங்கு நிலவும் இதமான சீதோசன நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் , வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் வருகை புரிந்தனர்.

கொடைக்கானலில் அமைந்துள்ள முக்கிய பழங்கால கோவில்களுக்கு சென்று வழிப்பட்ட ரஷ்யா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொடர்ந்து ஏரிச்சாலை பகுதியில் ராமர் குறித்த பாடல்களை பாடியும் ஆர்மோனியம் , மத்தளம் போன்ற இசை கருவிகளில் இசைத்து நடனம் ஆடினர். இவர்களின் பாடல்களை கேட்டு அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பாடலுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.