முக்கியச் செய்திகள் தமிழகம்

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில்  வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற  உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 3 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு வீர்ர் மாரியப்பனுக்கும் அமெரிக்க வீரர் சாம் க்ரேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 1.88 மீ. உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. அவரின் சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

Nandhakumar

காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ. 3,159 கோடி ஒதுக்கீடு!

Jayapriya

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

Gayathri Venkatesan