‘ரோமியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார்.…

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். ‘நான்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற  பல திரைப்படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த திரைப்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ‘ரோமியோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி! – பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாததால் கண்ணீர் மல்க பேட்டி!

இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இந்த திரைப்படம் மே 10 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.