சாலையில் ஓடும் சோபா! – ஆனந்த் மஹிந்திராவை திகைக்க வைத்த இளைஞர்கள்!

சாதாரண சோபாவை மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத வாகனமாக  இளைஞர்கள் மாற்றியது குறித்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான…

சாதாரண சோபாவை மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத வாகனமாக  இளைஞர்கள் மாற்றியது குறித்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர்.  இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 4 லட்சம் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.  இது தவிர,  அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும்,  படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்வீட்களில் நம்மால் காணமுடியும்.

அந்த வகையில்,  திறமையான இரு இளைஞர்களை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். அந்த இரண்டு இளைஞர்களும் ஒரு சாதாரண சோபாவை மக்கள் எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வாகனமாக மாற்றினர்.  சாலையில் ஓடும் சோபாவின் கிளிப்பை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

அதில்,  “ஒரு வேடிக்கையான கண்டுபிடிப்பு? ஆனால் அதில் உள்ள ஆர்வத்தையும் பொறியியல் முயற்சியையும் பாருங்கள். ஒரு நாடு ஆட்டோமொபைல்களில் மாபெரும் நாடாக மாற விரும்பினால்,  அதற்கு இன்னும் பல கண்டுபிடிப்பாளர்கள் தேவை.  நீங்கள் இதை இந்தியாவில் இயக்கினால், ஆர்டிஓ இன்ஸ்பெக்டரின் முகத்தை நான் பார்க்க விரும்புகிறேன்.”

https://twitter.com/anandmahindra/status/1740950270576865368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1740950270576865368%7Ctwgr%5E99de32f42f4bc9ee59f5f33595bb05c345f6dc23%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Foff-beat%2Fsofa-vehicle-on-road-anand-mahindra-x-post-going-viral%2F2038573

இந்த இளைஞர்கள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து சாதாரண சோபாவை (recliner) வாங்கி அதில் மோட்டார் மற்றும் சக்கரங்களை பொருத்தி வாகனமாக மாற்றியுள்ளனர்.  இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் அவரது படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.