#RJBalaji-யின் ‘சொர்கவாசல்’ – புது அப்டேட் கொடுத்த படக்குழு!

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படம் வரும் நவ.29ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக…

#RJBalaji's 'Sorkavasal' release date announced!

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படம் வரும் நவ.29ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ‘சொர்கவாசல்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இயக்குநருடன் இணைந்து எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ஆகியோர் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வரும் நவ.29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, படம் வெளியாக இன்னும் 9 நாட்களே இருப்பதாக நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.