பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் – பிரதமர் முடிவு!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளுக்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் வழங்குகிறார் பிரதமர் மோடி…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

கிட்டதட்ட 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் ஆகிய முப்படைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.