முக்கியச் செய்திகள் விளையாட்டு

கிடைக்குமா இமாலய வெற்றி? ஸ்காட்லாந்துடன் இந்திய அணி இன்று மோதல்

டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொள் கிறது.

டி-20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும் இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்தையும் எதிர்கொண்ட இந்திய அணி, படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்து போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் விராத் கோலி, நாங்கள் துணிச்சலின்றி ஆடியதால் தோற்றோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தங்கள் மிரட்டலைத் தொடர்ந்தனர். இந்த அதிரடியை துபாயில் இன்று நடக்கும் போட்டியிலும் தொடர்வார்கள் என்று நம்பலாம். இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், இன்று நடக்கும் ஸ்காட்லாந்து, அடுத்து நடக்க இருக்கும் நமீபியாவுடனான போட்டிகளில் இமாலய வெற்றி பெற வேண்டும். மற்றொரு பக்கம், நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைய வேண்டும். இந்தக் கணக்குகள் சரியாக நடந்தால்தான் அரையிறுதி கனவுக்கு வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் நடக்குமா என்பது டவுட்தான்.

இதனால் இமாலய வெற்றிக்கு இந்திய அணி முயற்சிக்கும் என்று நம்பலாம். அனுபவமற்ற ஸ்காட்லாந்து அணி, தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இருந்தாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்

Advertisement:
SHARE

Related posts

தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!

Gayathri Venkatesan

இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா

Halley karthi

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

Halley karthi