இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்; இந்தியா புறக்கணிப்பு

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐநாவில் தீர்மானம் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஐநா மனித…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐநாவில் தீர்மானம் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என மாநிலங்களவை கூட்டத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியிருந்தார். மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற போர்க்குற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. பெரும்பான்மையான உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது. தீர்மானத்தின் மீது இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.