இளநிலை சிவில் நீதிபதிகள் நியமனம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது சிவில் நீதிபதியாக நியமனம் பெற 1 ஆண்டு பயிற்சி என்பது கட்டாயம் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. வழக்கறிஞராக பணியாற்றுவதை மட்டுமல்லாமல் மாற்று சட்ட பணிகளில் பணியாற்றுவதையும் பயிற்சி காலமாக கருதலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றங்கள் சட்டப் பல்கலைக்கழகங்களின் ஆலோசனை பெற்று இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த பயிற்சி என்பது வழக்கமான வழக்கறிஞர் பயிற்சியின் மூலம் மட்டுமல்லாமல் மாநில நீதித்துறை அகாடமியால் வழங்கப்படும் நிறுவனத்திற்கு முந்தைய பயிற்சி உள்ளிட்டவற்றையும் பரிசீலிக்கலாம்.
அதனையும் கருத்தில் கொண்டு நியமனங்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. 2027 ஏப்ரல் 1முதல் வெளியிடப்படும் ஜூனியர் சிவில் நீதிபதிகள் பணிகளுக்கு குறைந்தது ஓராண்டு வழக்கறிஞர்களாக பணியாற்றி இருக்க வேண்டும். அதற்கு முந்தைய சட்ட உதவியாளர் பணிக்காலத்தையும் கருத்தில் கொண்டு நியமனங்கள் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
மாவட்ட நீதித்துறை அகாடமியில் ஓராண்டு தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து மாவட்ட அல்லது அமர்வு நீதிபதியின் கீழ் 6 மாதமும், உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஆறு மாத காலம் சட்ட உதவியாளர் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஏற்ப உயர் நீதிமன்றங்கள் மூன்று மாதங்களுக்குள் நீதித்துறை பணி நியமனம் தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




