30 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெள்ள நிவாரண நிதி வழங்கிட வங்கி விவரங்களை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும்,  நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும்,  தொழில் நிறுவனங்கள்,  தன்னார்வலர்கள்,  பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

கனமழையால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசியத் தேவைகளான பால், குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும்,  தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன.  கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில்,  ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்திடவும்,  நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும்,  தொழில் நிறுவனங்கள்,  தன்னார்வலர்கள்,  பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக  தமிழ்நாடு முதலமைச்சரும்,  அமைச்சர்களும்,  திமுகவின் நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து,  அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.  எனவே,  பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும்,  புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும்,  தன்னார்வலர்களும் பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIS) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம்.

https://cmprf.tn.gov.in

(2) Electronic Clearing System (ECS) / RTGS / NEFT

கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கிளை :  தலைமைச் செயலகம், சென்னை 600 009

சேமிப்புக் கணக்கு எண் : 117201000000070

IFS Code : IOBA0001172

For International Payment

A/c Number : 11720 10000 00070
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
SWIFT CODE : IOBAINBB001

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading