ரெட் கார்டு வாங்கிய பிரதீப் ஆண்டனி; வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பிரபலங்களும் ரசிகர்களும் போர்க்கொடி!

பிக்பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பல பிரபலங்களும் ரசிகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கிய…

பிக்பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பல பிரபலங்களும் ரசிகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில்,  இதில் கலந்து கொண்ட நடிகரும்,  முன்னாள் போட்டியாளரும் கவினின் நண்பனுமான பிரதீப் ஆண்டனி பல சர்ச்சைகளுக்கு காரணமானவராக இருந்த போதிலும் தன்னுடைய விளையாட்டை நேர்த்தியாக விளையாடியதாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம்,  பிக்பாஸ் கொடுத்த பெல் டாஸ்கில் பிரதீப்பின் பெல் அடித்ததாக கூல் சுரேஷ் சொன்ன போது,  கூல் சுரேஷ் பொய் சொன்னதாக கோபத்தில் அவரை மிகவும் தரைகுறைவான வார்த்தைகளால் பேசினார்.  இதற்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேசினார்.
இதனால் உரிமை குரல் எழுப்பிய சக பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர்,  பிரதீப் இருப்பதால் தாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதாக தெரிவித்தனர்.  இதையடுத்து அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,  விசித்திராவிடம் மாயா,  பூர்ணிமா உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,  அர்ச்சனாவும் பிரதீப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  முன்னதாக, பிரதீப்பின் வெளியேற்றம் நியாயமற்றது எனத் தெரிவித்து பாடலாசிரியர் சினேகன்,  நடிகர் கவின்,  நடன இயக்குநர் அமீர்,  நடிகை பாவினி ஆகிய பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.