இந்திய விமான நிலைய ஆணையம் 342 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர் மற்றும் இளநிலை நிர்வாக அதிகாரி ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி மொத்தம் 342 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி அமர்த்தப்படுவார்கள்.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதி குறித்து முழுவிபரங்களை அறிய அதிகாரப்பூர்வ வலைதளமான http://www.aai.aero தளத்தில் சரிபார்க்கவும்.
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 4-ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பதவிகளுக்காக விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
கடைசி தேதிக்கு முன் விண்ணப்பத்தை பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகளுக்கான அறிவிப்புகள் பின்னர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.aai.aero இல் கிடைக்கும்.







