“குறி வச்சா இரை விழணும்” – ஓடிடியில் வெளியானது #Vettaiyan!

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.   ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத்…

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.  

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படியுங்கள் : #RainAlert | பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இருப்பினும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளன.  இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வேட்டையன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.