அடுத்தக்கட்ட திட்டம் என்ன?- ரஜினிகாந்த் பேட்டி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக…

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில், பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆந்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அனுபெம்கேர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  நேற்று நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். தென் மாநிலங்களைச் சேர்ந்த என்.சி.சி மாணவர்களையும் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கலந்துரையாடினார்.

 

இந்நிலையில், இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சரியாக தெரியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார். உங்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என கேட்கப்பட்டபோது படப்பிடிப்பில் கலந்துகொள்வதுதான் அடுத்தக்கட்ட திட்டம் என்றார். உடல் நலம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது தாம் நன்றாக உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.