மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடித்து, ஜூலை…

நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நடிகர் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடித்து, ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பினார். இந்நிலையில் வருகின்ற 12 ஆம் தேதி அதாவது நாளை மறு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்த பிறகு புதிதாக பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா 2 வது அலையின் தாக்கம் சற்று குறைந்து வருவதால், இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்த அவர் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.