கனமழை எச்சரிக்கை – #Chennai மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து…

People beware! Don't forget the umbrella.. Districts likely to receive rain till 10 am - #IMD Alert!

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்.16) மற்றும் 17ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, மழை தொடர்பான புகார், மீட்புப்பணிகளுக்கு 1913 என்ற (150 இணைப்புகள்) எண்ணை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையை 044-2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.