லடாக்கில் ராகுல் காந்தி பைக் ரைடு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை பாங்காங் சோ ஏரிக்கு பைக்கில் சென்றார். சமீபத்தில் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள மோட்டார் மெக்கானிக்களுடன் பேசிய அவர், தனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவ்வப்போது அதைச் செய்ய முடியவில்லை கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை லடாக்கிற்கு தனது இரண்டு நாள் பயணத்தின் போது லேவில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் உரையாடினார். அவர் இளைஞர்களுடன் 40 நிமிடங்கள் செலவழித்ததாகவும், நிரம்பிய அரங்கத்தில் இளைஞர்களுடன் பல பிரச்னைகளை விவாதித்ததாகவும் காங்கிரஸின் உள்ளூர் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு லடாக்கிற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். ராகுல் காந்தியின் லடாக் பயணம் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ராகுல் காந்தி தனது தந்தையின் பிறந்தநாளை பாங்காங் சோ ஏரியில் மட்டுமே கொண்டாடுவார். இது குறித்து அவர் ராகுல் காந்தி அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், “நான் பாங்காங் ஏரிக்கு செல்கிறேன். இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும் என்று என் தந்தை கூறுவார் என தெரிவித்துள்ளார்.
இதனால், தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி, ராகுல் காந்தி பாங்காங் டிசோவில் தங்குவார் என்றும், கார்கில் நினைவிடத்துக்குச் செல்லும் அவர், அங்குள்ள வீரர்களுடன் உரையாடுகிறார். கல்லூரி நாட்களில் கால்பந்து வீரராக இருந்த ராகுல் காந்தி, லேவில் அவரது கால்பந்து போட்டியை பார்க்கும் திட்டமும் உள்ளது. கல்லூரி நாட்களில் சிறந்த கால்பந்து வீரராக இருந்துள்ளார்.







