#PopulationCensus காலதாமதம் குறித்து கேள்வி – புள்ளியல் குழுவை கலைத்து மத்திய அரசு உத்தரவு!

பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட மத்திய புள்ளியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. இந்தியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Question on #PopulationCensus - Central Govt orders dissolution of Statistics Committee!

பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட மத்திய புள்ளியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.

இந்தியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்றால்
தாமதமானது. இந்த கணக்கெடுப்பை நடத்த சுமார் 16 மாதங்கள் ஆகும் எனவும், 2026 மார்ச்சுக்குள் இதன் தரவுகள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்தாண்டு ஜூலை மாதம் நியமித்தது.

இந்த நிலையில், முறையான காரணமின்றி நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்குகூட தகவல் அளிக்காமல், அந்த குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட மத்திய புள்ளியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காலதாமதம் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், இந்தக் குழு கலைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பாக குழுவின் உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாவது..

“மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.