மீண்டும் வருகிறது பிஜிஎம்ஐ; மகிழ்ச்சியில் வீடியோ கேம் ரசிகர்கள்!…

விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன…

விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய சூழலில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பு நிறுவனமான கிராஃப்டான், Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்தது. இதனை கடந்த 2021 ஜூலை வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த செயலி அறிமுகமானது முதல் பலரும் அதனை ஆர்வமுடன் டவுன்லோடு செய்து, தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து, விளையாடி வந்தனர். இந்நிலையில், இந்த செயலி கடந்த ஆண்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

கடந்த 10 மாதங்களாக இந்த விளையாட்டு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் மத்திய அரசு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் சட்டங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.