தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அமைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், கடந்த 26ஆம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதனையடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளார்.







