சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கியுள்ள குரங்கி பெடல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கியுள்ள குரங்கி பெடல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான  ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் அவரது 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘அமரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1783111378330321327

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான, சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல் என்ற திரைப்படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் கமல்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் குறிப்பிட்டுள்ளதாவது:

“1980களின் ஒரு கோடைக்காலம். உங்கள் குழந்தைப்பருவத்துக்கு சைக்கிளின் வழி அழைத்துச்செல்ல மே 3ஆம் தேதி திரையரங்கத்துக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.