மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ”விடா முயற்சி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் பைக் பயணத்தில் பிசியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் சூட்டிங் தள்ளிப்போகும் என எதிர் பார்க்கப்படுகிறது.







