29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள் : குடியரசு தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று தனது 73வது நாளை பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு:

இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். உங்களின் தொலைநோக்குப் பார்வையுடனும், வலிமையான தலைமையுடனும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீங்கள் வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் அற்புதமான தலைமைத்துவத்தால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பயனளிக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் :

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், ர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:

வரலாற்றில் முதல்முறையாக, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கும் அற்புதமான பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கையை வறுமையின் சாபத்தில் இருந்து விடுவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க மோடி இன்று ‘தீன்மித்ரா’ என்று அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே :

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி :

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழிசை செளந்தரராஜன் :

விண்ணுலகில் சந்திராயன், ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கி சுய சார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர், அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதுவை முதல்வர் ரங்கசாமி :

இந்தியாவின் மரியாதை உங்கள் தலைமையின் கீழ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மரியாதை தொடர்ந்து உச்சம் பெற நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading