நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
கொரோனா தொற்றுக்குப் பின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்தது . கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் மாநில பொருளாதாரம் வளர்கிறது . பணவீக்கம் தேசிய அளவை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
மேலும் தனிநபர் ஆண்டு வருமானம் நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ.1.66 லட்சம், தேசிய அளவில் ரூ.98,374 ஆக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது.
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.







