ரூ.100 கோடி வசூலித்த ‘பிரேமலு’ திரைப்படம்!

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன்,  மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள  ‘பிரேமலு’  திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மொழியில் பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன், …

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன்,  மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள  ‘பிரேமலு’  திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள மொழியில் பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன்,  மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரேமலு’.  இத்திரைப்படத்திற்கு விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.  நடிகர் ஃபகத் ஃபாசில்,  இயக்குநர் திலிஷ் போத்தன்,  திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும்,  இப்படத்தின் ஓடிடி உரிமையினை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில்,  இத்திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.