பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ – எஸ்.ஜே.சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

பிரதீப் ரங்கநாதன் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட…

பிரதீப் ரங்கநாதன் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, தற்போது எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.