பிரபாஸ் ரசிகரகள், ஆதிபுருஷ் அப்டேட் கேட்டு Hashtags ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபாஸுக்கு ஏகப்பட்ட, விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ் படம் பற்றிய அறிவிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் தயாரிப்பாளர்களிடம் கோக்கத் தொடங்கியுள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு, #StartAdipurushPromotions டிவிட்டரில் பரவ தொடங்கியது. விரைவில் அது சமூக ஊடக தளத்தின் ட்ரெண்டானது.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கிய ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் திரைப்படத் தழுவலாகும். மேலும் இதில் கிருத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் லங்கேஷாகவும் நடித்துள்ளனர்.
https://twitter.com/rebelismm/status/1637468999364804610?s=20
ஆதிபுருஷ் வெளியீட்டுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாலும், படத்தைப் பற்றி பெரிய அளவில் எந்த அறிவிப்பும் வராததாலும் பிரபாஸ் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இயக்குநர் ஓம் ரவுத் உட்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பல நெட்டிசன்கள் ஆதிபுருஷ் அப்டேட் கேட்டு Hashtags ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.







