ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 கி.மீ. ஆழத்தில் (80 மைல்) மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தல் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.







