நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை, நவ.3) இரவு 11.32 மணி அளவில் அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வட இந்தியாவில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.







