நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் வெளியான ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ! -ரசிகர்கள் உற்சாகம்…

தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.   ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக…

தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.  

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில் இன்று தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/Ags_production/status/1716704893426364590?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.