பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளராக பொன்ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளராக பொன்ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்திடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தாலும் கூறும்போது 1967 ஆம் ஆண்டு கடல் பாசியில் அல்வா செய்து தரப்படும் என்று திமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்துவிட்டு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் குறித்து இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லாத போது தேர்தல் தேதி அறிவித்தவுடன் மட்டும் இந்த பிரச்சனை எப்படி வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.